போடி, செப்.15: போடி அருகே சில்லமரத்துப்பட்டி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (70). இவர் தனது மனைவியுடன் டூவீலரில், சிலமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சில்லமரத்துபட்டி நூலகம் அருகே திரும்பியபோது, போடியில் இருந்து வந்த டூவீலர், பாண்டியனின் டூவீலர் மீது மோதியது.
இதில் தம்பதி நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.