Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இலவச அழகுக் கலை மேலாண்மை பயிற்சி

தேனி, அக். 14: தேனி வடவீரநாயக்கன்பட்டி சாலை, தொழிலாளர் நல வாரிய அலுவலகம் அருகில் இயங்கி வரும் கனராக வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் அழகுக்கலை மேலாண்மை பயிற்சி வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் துவங்க உள்ளது. 18 வயது நிரம்பிய வேலை இல்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, தங்குமிடம் மற்றும் உணவு இலவசம். தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை 35 நாட்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை அளிக்கப்படும். விருப்பம் உள்ளோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றோடு அக்டோபர் 22ம் தேதிக்கு முன்பாக நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.