தேனி, ஆக.14: தமிழக தமிழாசிரியர் கழக மாநிலத் தலைவர் சரவணன் கூறியதாவது: தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் தமிழக அரசினை தமிழக தமிழாசிரியர் கழகம் பாராட்டுகிறது. இருமொழிக் கொள்கையை ஆணித்தரமாக நடைமுறைப்படுத்த கொள்கைமுடிவு எடுத்ததையும் பாராட்டுகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாயத் தேர்ச்சி முடிவும் வரவேற்கத்தக்கது.
11ம் வகுப்பு பொதுத் தேர்வினை ரத்து செய்ததையும் வரவேற்கிறோம். மேலும் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவியர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும். தமிழ்நாடு அரசிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2,162 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார்.