வருசநாடு, அக். 13: கண்டமனூர், வள்ளல் நதி, மேகமலை, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை துறை சார்பில் பனைவிதை நடவு செய்யும் பணி தொடங்கியது. இந்நிகழ்வில், கடமலைக்குண்டு வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டியன், கடமலைக்குண்டு வேளாண்மை அலுவலர் அருண்குமார், உட்பட பல அலுவலர்கள் உடன் இருந்தனர். இதில் 2,500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நடவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement