போடி செப். 13: போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் உள்ள பாலாஜி நகரில் குடியிருப்பவர் செந்தில்குமார் (46). இவர் ரெங்கநாதபுரத்தில் கார்மெண்ட்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு செந்தில்குமார் வந்து பார்த்த போது, இவரது வீட்டு காம்பவுண்ட் சுவரில் இறங்கி ஒருவர் நின்ற கொண்டிருந்ததை கண்டார்.
உடனடியாக அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்களும் சேர்ந்து அவரை பிடித்தனர். பின்பு போடி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் திருட வந்தவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் தப்பியோடியது, போடி டி.வி.கே.கே நகரை சேர்ந்த ராஜேஷ் என்பதுதெரிய வந்தது. இதனையடுத்து ராஜேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.