போடி, செப். 12: போடி அருகே, வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் காந்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் தயாளன் (50). கூலித்தொழிலாளியான இவர் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளானதால், சம்பளம் முழுவதையும் குடிப்பதற்கு செலவு செய்துள்ளார். இதனால் குடும்ப செலவுக்காக வெளியில் அதிகளவு கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி தரும்படி அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் விரக்கியடைந்த நிலையில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ விஜய் மற்றும் போலீசார், அவரது சடலத்தை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.