வருசநாடு, நவ. 11: வருசநாடு, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு, வாலிப்பாறை மேல்வாலிப்பாறை, உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 60 ஆண்டு காலமாக இலவச வீட்டு மனை பட்டா, நிலங்களுக்கு தேவையான பட்டா வழங்க கோரிபொதுமக்கள் விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், பட்டா இல்லாமல் அரசு சார்ந்த திட்டங்களான வங்கிக் கடன்கள் தொகுப்பு வீடுகள் கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் பெறுவதில் சிக்கல் நிலவி வருகிறது. எனவே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement

