தேவதானப்பட்டி, நவ. 11: அரியலூர் மாவட்டம், பொய்யூர் தெற்கு தெருவைச் சேர்ந்த மனோகரன்(67) என்பவர் குடும்பத்துடன் காரில் தேனியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தார். அப்போது தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி என்னும் இடத்தில் வரும் போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மனோகரன், கவிபாரதி(37), அனுசுயா, யாழிசை ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவர் கொடைக்கானலைச் சேர்ந்த சக்திசீனிவாசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement

