கொடைக்கானல், நவ.11: கொடைக்கானலில் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான பைன் மரக்காடுகள் உள்ள பகுதி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் ஏற்றமான சாலை உள்ளதால், அதில் வாகனங்கள் பயணம் செய்வதுடன் சற்று சிரமமாக இருப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று வடமதுரையில் இருந்து வேனில், பயணிகள் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது இந்த பைன் மர காடு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை இறக்கிவிட்டு, ஏற்றமான சாலையில் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது வாகனம் பின்புறமாக நகர்ந்து செல்லாமல் இருக்க, பின் பக்க டயருக்கு ஓட்டுநர் கல் வைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக வேன், பின்னோக்கி நகர்ந்து ஓடியது. இதில் வலது மற்றும் இடது பக்கங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் மோதியது. இந்த விபத்தில் கார் உள்ளிட்ட 4 வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் வாகனங்களில் யாரும் இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக பைன் மர காடு சுற்றுலா தலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement

