ஆண்டிபட்டி, செப். 11: ஆண்டிபட்டி அருகே கொண்டநாயக்கன்பட்டி செக்போஸ்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மனைவி பாண்டியம்மாள். பாண்டியம்மாள் முருகேசனின் அக்கா மகள் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருகேசன் தேனி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வருவதாகவும், சரிவர வேலைக்கு செல்லாமல், சம்பளப் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் இருந்ததால் இவரது மனைவி பாண்டியம்மாள் பிள்ளைகளுடன் கடந்த மாதம் 22ம் தேதி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதாக தெரிகிறது. மேலும் முருகேசன், மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்ற விரக்தியில் நேற்று முன்தினம் அவர் வசிக்கும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.