மூணாறு, அக். 10: கேரளா மாநில இளைஞர் நல வாரியம் மற்றும் மூணாறு ஊராட்சி இணைந்து நடத்தும் கேரள உற்சவம் இம்முறை அக்.11,12,13 ஆகிய தேதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பழைய மூணாறு உயர்நிலை விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். கால்பந்து, 20/20 கிரிக்கெட், தடகளம் உள்ளிட்ட போட்டிகள் பழைய மூணாறு உயர்நிலை விளையாட்டு மைதானத்திலும், ஷட்டில் பேட்மின்டன் (ஒற்றையர்/இரட்டையர்,கைப்பந்து, கபடி ஆகியவை பழைய மூணாறு கே.டி.எச்.பி கிளப் மைதானத்திலும்,கூடைப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) அரசு உயர்நிலை பள்ளி மைதானத்திலும், பரதநாட்டியம் லலிதகானம், திருவாதிரை, கவிதை ஒப்புவித்தல், நாட்டுப்புற பாடல்கள், மோகினி நடனம் உள்ளிட்ட கலை போட்டிகள் பழைய மூணாறு சிக்ஷக் சதனில் வைத்து நடைபெறும் என்று மூணாறு ஊராட்சி தலைவர் மணிமொழி, செயலாளர் உதயகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement