தேவதானப்பட்டி, அக்.9: தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி(42). இவரது வீட்டின் அருகே வசிக்கும் நாகராஜ் என்பவருக்கும் லட்சுமிக்கும் பொதுப்பாதை பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுப்பாதை மற்றும் பொதுசாக்கடைகளை நாகராஜ் தரப்பினர் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டதற்கு, லட்சுமியை நாகராஜ் தரப்பினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரில் ஜெயமங்கலம் போலீசார், நாகராஜ், பிரியா, நாகேஸ்வரி, ரத்தினம், ஜோதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement