வருசநாடு, அக்.9: கண்டமனூர் அருகே, சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் தம்பதியர் படுகாயமடைந்தனர். ஆண்டிப்பட்டி அருகே கொண்டம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (45). இவரது மனைவி சாந்தி (35). காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் அவர், தனது மனைவியுடன் சரக்கு வாகனத்தில் கண்டமனூர் தக்காளி மார்க்கெட் சென்று தக்காளி வாங்கிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். சிப்காட் அருகே வந்தபோது, வாகனத்தின் குறுக்கே திடீரென மாடு வந்ததால், பிரேக் முடிக்க முயன்று வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் மோதி விபத்துள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரும், மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
+
Advertisement