மூணாறு, செப். 9: இடுக்கி மாவட்டத்தில் மணியாரங்குடி பகுதியில் ஜான்சன்-பிஜி தம்பதி வசித்து வருகின்றனர். ஜான்சன் பாதிரியாராக பணி செய்து வருகிறார். திருவெல்லா பகுதியைச் சேர்ந்த இவர்கள் மணியாரங்குடி பகுதிக்கு குடிபெயர்ந்து சில மாதங்களை ஆகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் நிறைமாத கர்ப்பிணியான பிஜிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த போது பச்சிளம் குழந்தை இறந்தது. தகவல் அறிந்து வீட்டிற்கு வந்து பார்த்த சுகாதாரத் துறை ஊழியர்கள் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். என்றாலும் அவர்கள் செல்ல தயாராகவில்லை.
தொடர்ந்து காவல்துறையின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து பச்சிளம் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இடுக்கி போலீசார் ஜான்சன் மற்றும் அவரது பிஜி மீது இயற்கைக்கு மாறான மரணத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனைக்கு பிறகு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.