தேவதானப்பட்டி, செப். 9: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் மனைவி சிவாலட்சுமி(27). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சிவாலட்சுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 31ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது சிவாலட்சுமி தூக்கிட்டு கொண்டார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த சிவாலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.