சின்னமனூர், நவ. 7: சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அழகு பாண்டியன், சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் சதீஷ்குமார், சைபர் கிரைம் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலம் பேசுகையில், தொடர்ந்து ஆன்ட்ராய்டு மூலமாக ஜி-பே, போன்-பே போன்றவைகள் மூலமாக பணம் டிரான்ஸ்பர் செய்கிற போது கவனமாக இருக்க வேண்டும். செல்போன் கவனமாக கையாளவில்லை என்றால் செல்போனை நமக்கு எதிரியாக மாறும். சைபர் கிரைம் தொடர்பான புகாரளிக்க 1930 என்ற நம்பரை தொடர்பு கொள்ளலாம்.’’ என்றார்.
