போடி, ஆக.6: போடி அருகே அரசு நிலப்பகுதியில் உள்ள பனை மரங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போடி அருகே ராணிமங்கம்மாள் சாலையில், அரசு நிலப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த 6 மாதத்திற்கு முன்பாக, ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக இந்த பனைமரங்களை பராமரிக்க இயற்கை ஆர்வலர் பனை முருகன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு நிலத்தில் உள்ள பனை மரங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். மேலும், பனைமரங்களின் வேர்ப்பகுதியில் ஆழமாகவும் நீண்ட குழிதோண்டியும் உள்ளனர். இதனையறிந்த அவர், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் பனைமரங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போடி தாலுகா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.