சின்னமனூர், நவ. 5: சின்னமனூர் தலையாரி ராமசாமி தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பால்பாண்டியன் (35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன், மதியம் 3 மணியளவில், வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டூவீலரை காணவில்லை.
பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மர்மநபர்கள் டூவீலரை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பால்பாண்டியன், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் எஸ்ஐ செல்வராஜ் வழக்குப்பதிந்து திருடுபோன டூவீலரை தேடி வருகிறார்.
