உத்தமபாளையம், நவ. 5: உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையை கண்டித்து எஸ்.டி.பிஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் சகுபர் சாதிக் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கல்பத்துல்லாகான் வரவேற்றார்.
தேனி மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி, மாவட்ட துணைத்தலைவர் சையது காதர் சாஹிப், மாவட்ட செயலாளர் தாவூத்நிஸார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் ஹக்கீம் சேட், கம்பம் தொகுதி தலைவர் அஜ்மீர்கான், ஆண்டிபட்டி தொகுதி தலைவர் அஜ்மீர்கான் வேளாண் அணி மாவட்ட துணைத் தலைவர் சகாபுதீன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் உசேன் மீரான் மைதீன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
