தேனி, டிச.4: தேனி மற்றும் பெரியகுளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்யத் தொடங்கி அதிகாலையிலும் மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் டிட்வா புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் பகலில் மழை இல்லாத நிலையில், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. மேலும், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. திடீர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மாவட்டத்தில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், தற்போது பெய்த கனமழை காரணமாக குளிர் மேலும் அதிகரித்து காணப்படுகிறது.
+
Advertisement

