கூடலூர், ஜூலை 30: கூடலூரில் விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒரு பெண்ணை கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையிலான போலீசார் நகர் 3வது வார்டில் உள்ள பேச்சியம்மன் கோவில் தெருவில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ரவி மனைவி போதுமணி (50) என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில், ‘போதுமணிக்கு கஞ்சா விற்றது கூடலூர் மூனுசாமி கோவில் தெருவைச் சேர்ந்த சமயன் மனைவி மல்லிகா என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிந்து போலீசார் போதுமணியை கைது செய்தனர். தலைமறைவான மல்லிகாவை தேடி வருகின்றனர்.