மூணாறு, ஆக. 2: கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 1200 உள்ளாட்சி அமைப்புகளின் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி ஆண்கள் 1 கோடியே 26 லட்சத்து 32 ஆயிரத்து 186 பேரும், பெண்கள் 1 கோடியே 40 லட்சத்து 45 ஆயிரத்து 837 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 233 பேர் என 2 கோடியே 66 லட்சத்து 78 ஆயிரத்து 256 வாக்காளர்கள் உள்ளனர். மிகவும் கூடுதலாக மலப்புரம் மாவட்டத்தில் 32.71 லட்சம், மிகவும் குறைவாக வயநாடு மாவட்டத்தில் 6.02 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
உள்ளாட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநில தேர்தல் கமிஷனின் sec.kerala.gov.in என்ற இணைய தளம் ஆகியவற்றில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பிழை திருத்தங்கள் செய்வதற்கு ஆக.7 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அலைபேசி எண் மூலம் பதிவு செய்ய வேண்டும். இடுக்கி மாவட்டத்தில் ஆண்கள் 4 லட்சத்து 23 ஆயிரத்து 370 பேரும், பெண்கள் 4 லட்சத்து 43 ஆயிரத்து 644 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் என, 8, லட்சத்து 67 ஆயிரத்து 19 வாக்காளர்கள் உள்ளனர்.