வருசநாடு, டிச.7: வருசநாடு அருகே காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால், நஷ்டமடைவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சி சின்னாநகர் அண்ணாநகர் வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பயிர்களை காட்டு பன்றிகள் அழித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளது.
மேலும் அண்ணாநகர் வாலிப்பாறை பகுதியை சேர்ந்த விவசாயி பெருமாளுக்கு சொந்தமான நிலத்தில் காட்டுப் பன்றிகள் இரவு பகலாக தென்னைமரக் கன்றுகளை சேதப்படுத்தி வருகிறது. இது சம்பந்தமாக வருசநாடு வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு அளித்திட வேண்டும். இல்லையெனில் விவசாய தென்னை மரக்கன்றுகள் மற்றும் விவசாய பயிர்கள் அனைத்தும் மிகவும் சேதம் ஏற்படும் எனவும் விவசாயி தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அதிகளவில் தொல்லைகள் கொடுத்து வருகிறது. இதற்கு தேனி மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


