உடுமலை, மே 5: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்ட கிளைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் ரகோத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்துதல், ஓய்வூதியர்களின் மருத்துவக்காப்பீட்டில் உள்ள குறைபாடுகளை நீக்குதல் 70, 75 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், கருவூல நேர்காணலில் உள்ள பிரச்னைகள் குறித்து கலந்துரையாடி விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் ஆகியோர் உரையாற்றினர். துணைத்தலைவர் காளியப்பன், இணைச்செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


