தேனி, நவ. 19: தேனி மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் 4ம் நாள் நிகழ்ச்சியாக பெரியகுளம் சரகம் லட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்பாண்டியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தனர். இந்நிகழ்ச்சியில் லட்சுமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணிசந்திரன் முன்னால் தலைவர் ரெங்கசாமி தேனி மாவட்ட கூப்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ஜெயராம் சங்க பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


