போடி, அக்.29: போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் (40) இவர் ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று, தனது டூவீலரை, மீனா விலக்கு பகுதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை திரும்பி வந்து பார்த்த போது டூவீலரை காணவில்லை.இது குறித்து அவர் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன டூவீலர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
