தேனி, நவ.28: போடி அருகே மலை கிராமங்களில் சாலை வசதி அமைத்து தர கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். போடி அருகே உள்ள முட்டம், முதுவார்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகிய மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவை கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தனர். அதில், போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகிய மலை கிராமங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம்.
எங்கள் கிராமத்திற்கு முறையான சாலை வசதிகள் கிடையாது. இதனால் மருத்துவ சேவை மற்றும் கல்விச் சேவை கிடைக்காமல் எங்கள் கிராமப் பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்கள் பகுதியில் அடிப்படை தேவையான சாலை வசதியை அமைத்து தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

