தேனி, அக். 28: தென்னையில் ஈரியோபிட் பேன் தாக்குதல் காணப்பட்டால் அதனை எளிதில் குறைக்கலாம் என, வேளாண் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘தென்னையில் ஈரியோபிட் பேன் முக்கோண வடிவ மஞ்சள் நிறத் திட்டுக்களாக காய்களின் கழுத்துப் பகுதியில் காணப்படும். காய்ந்த திசுக்கள் பழுப்பு நிற திட்டுக்கள், நீளவாக்கில் பிளவுகள், நார்ப்பகுதியில் வெட்டுகள், தாக்கப்பட்ட பகுதியில் பிசின் வடிதல் கொப்பரையின் அளவு குறைதல் போன்றவை இவற்றின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த பூச்சி தாக்குதலை குறைக்க பரிந்துரைக்கபட்ட உரத்தை இட வேண்டும்.இதன்படி யூரியா 0.5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ, மூரேட்ஆப் பொட்டாஷ் 1.5 கிலோ ஆகியவற்றை 6 மாத இடைவெளியில் இரு முறை இடவேண்டும். ஸ்பைரோமேசிபென் 1 மிலி மற்றும் அசாடிரக்டின் 10000 பிபிஎம் 2 மிலி ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து காய் மற்றும் இலைகள் மீது தெளிக்கலம். இந்த நடவடிக்கைளால் தென்னையை பாதிக்கும் ஈரியோபிட் பேன் தாக்குதல் குறைக்கலாம்’’ என்றனர்.
+
Advertisement
