மூணாறு, நவ.27: கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள வாகுவாரை எஸ்டேட் நாவல் டிவிஷனை சேர்ந்த கூலி தொழிலாளியான முத்துப்பாண்டி என்பவரின் கறவை பசு, நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இரவு முழுவதும் பசு மாட்டை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் வேலைக்கு சென்ற தொழிலாளிகள், இறைச்சல்பாறை அருகே புலி தாக்கி கொன்ற நிலையில் பசுவின் பாதி உடலை கண்டனர். இதேபோன்று கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொரண்டிக்காடு எஸ்டேட்டில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாட்டை புலி தாக்கி கொன்ற நிலையில், தொடர்ந்து 2வது சம்பவமும் நடந்ததுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
+
Advertisement

