வருசநாடு, அக். 25: மயிலாடும்பாறை அருகே கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மயிலாடும்பாறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் குமணன்தொழு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொன்னம்படுகை கிராமம் செல்லும் சாலையில் 15 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த குமணன்தொழுவை சேர்ந்த ஆனந்தன் 40, சுடுகாடு அருகே 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த அதே குமணன்தொழு சேர்ந்த குபேந்திரன் 38 ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement
