தேனி, அக். 25: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி 14 வது நாளாக வனத்துறை தடை விதித்தனர்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள இயற்கை எழில் மிகுந்த கும்பக்கரை அருவி உள்ளது. கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 10ம் தேதி முதல் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அருவிக்கு வெள்ளப்பெருக்கெடுத்து நீர் வருவதால் அருவிக்கு செல்லும் படிக்கட்டுகள் தொடர்ந்து அருவிப்பகுதி முழுமையாக நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையானது தொடர்ந்து 14வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் அருவி பகுதிக்கு செல்ல தடை விதித்தனர்.
+
Advertisement
