வருசநாடு, செப். 22: ஆண்டிபட்டி தாலுகா, கடமலைக்குண்டு பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் 1300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
இங்கு சீரான குடிநீர் விநியோகத்தை பெறும் வகையில் புதிய குடிநீர் தொட்டி அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக ரேஷனில் பொருட்கள் வாங்க நீண்ட நேரம் பிடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் பகுதியில் கூடுதலாக ரேஷன் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.