வருசநாடு, செப். 22: வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் தார்ச்சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தது.
கிட்டதட்ட 60 ஆண்டுகாலமாக சாலை வசதிகள் கிடையாது. இதனால், இப்பகுதி மக்கள் விவசாய பொருட்களை கொண்டு செல்வதில், சிக்கல் நிலவி வருவதாக தெரிவித்தனர். மேலும், தற்போது மழை பெய்து வருவதால் சாலைகளில் மறிக்கப்பட்டு பாதிப்படைந்துள்ளது. இதற்கு ஏற்கனவே பலமுறை ஊராட்சி ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் புகார் மனு அளித்துள்ளனர். தற்போது மழைக்காலம் அதிகம் பெய்து வருவதால் மிகவும் மோசமான நிலையில் சாலைகள் உள்ளது.
எனவே விரைவில் தார்சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.