போடி, செப். 14: போடி அருகே மேல சொக்கநாதபுரம் வினோபாஜி காலனி 3வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (43). வேன் டிரைவர். நேற்று உறவினர்களுடன் சேர்ந்து, மது அருந்திவிட்டு ரமேஷ் என்பவரின் தென்னந்தோப்பில் சென்று கிணற்றில் குளித்துள்ளனர். அப்போது, மணிகண்டன் திடீரென நீருக்குள் மூழ்கியவர் நீண்டநேரமாகியும் வெளிவராததால், அவரது உறவினர் தேடியுள்ளனர். ஆனால், அவர்களால் தேட முடியாததால், உடனடியாக போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சுமார் அரைமணி நேரம் போராடி நீருக்குள் மூழ்கி உயிரிழந்த மணிகண்டனை சடலமாக மீட்டனர். இது குறித்து மணிகண்டனின் மனைவி திவ்யா (32) போடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement