போடி, அக். 12: போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி வினோபாஜி காலனியை சேர்ந்தவர் முத்து அருண் பாலாஜி (28). பெட்ரோல் பங்க் ஊழியர். சில தினங்களாக கடன் பிரச்னையால் இவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ மலைச்சாமி, மாயமான முத்து அருண் பாலாஜியை தேடி வருகிறார்.
+
Advertisement