தேனி, ஆக. 12:தேனியில், ஆணவ படுகொலையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தேனி நகர், பங்களா மேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ரபீக், மதன் தலைமை வகித்தனர். விசிக கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் செல்லப்பாண்டியன், தேனி - திண்டுக்கல் மண்டல செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது ஆணவ படுகொலை கண்டித்தும் இக்கொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மண்டல துணைச் செயலாளர் சுருளி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், மாவட்ட துணைச் செயலாளர் ஆரோக்கியசாமி, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் சுசி. தமிழ்பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.