தேனி,டிச.11:தேனி அரசினர் ஐடிஐயில் கடந்த 1964ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பயின்று சான்றிதழ் பெறாமல் உள்ளவர்கள் தற்போது சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனியில் 1964 முதல் 2019 வரை பயின்று பயிற்சி முடித்து சென்ற முன்னாள் பயிற்சியாளர் பலர் தேர்ச்சி பெற்றமைக்கான தேசிய தொழிற்சான்றிதழ் மற்றும் தோல்வியுற்ற பயிற்சியாளர்களின் மதிப்பெண் பட்டியல்கள் இன்று வரை பெறாமல் உள்ளது.
எனவே உரிய பயிற்சியாளர்கள் அலுவலக வேலைநாட்களில் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரடியாக அணுகி தங்களின் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். அசல் தேசிய தொழிற்சான்றிதழ் பெற வருகை தரும் போது, அடையாள அட்டை மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டு, ஆதார் அட்டை சமர்ப்பித்து தேசிய தொழிற்சான்றிதழ் மற்றும் இதர அசல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 94990 55765 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.


