தேனி, டிச.9: பாஜக அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தேனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி நகர் பழைய பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.ரபீக், சிபிஐ மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தனர்.
சிபிஎம் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், சிபிஎம் எம்எல் மாநிலக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் விசிக மேற்கு மாவட்ட செயலாளர் மதன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேக்குவோரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். இதில் விசித்த இடதுசாரி கட்சிகள் சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


