கூடலூர், டிச.9: கூடலூர் நகரின் முக்கிய பகுதியில் கூடலூர் - குமுளி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பல்க் அருகே பேருந்துகள் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி செல்கிறது. இந்தப் பேருந்து நிறுத்தத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும்,அண்டை மாநிலமான கேரளாவுக்கு வேலைக்கு சென்று வரும் பயணிகளும்,சுற்றியுள்ள குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் இருந்தும் ஏராளமான ஆட்கள் இந்த பஸ் நிறுத்தத்திலிருந்து பயணங்கள் மேற்கொள்கின்றனர்.
கூடலூர் பேருந்து நிலையத்திற்கு அடுத்தபடியாக இந்த பஸ் நிறுத்தம் அதிகமான மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுகிறது. ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மழையிலும் வெயிலிலும் பயணிகள் பேருந்துக்காக காத்து நிற்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி நகராட்சி நிர்வாகத்தால் துவங்கப்பட்டது.


