தேனி, டிச.9: போலீசில் பணிபுரிந்து வந்த நிலையில் உயிரிழந்த இளம் போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதியாக ரூ.18 லட்சத்து 68 ஆயிரத்தை இறந்த போலீஸ்காரரின் பெற்றோரிடம் மாவட்ட போலீஸ் எஸ் பி வழங்கினார். தேனி அருகே முத்துதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரகுமார் மகன் சதீஷ் பாபு (28). இவர் தமிழ்நாடு போலீசில் கடந்த 2017ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தார். சென்னை பெருநகர ஆயுதப் படையில் பணிபுரிந்த சதீஷ் பாபு உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
+
Advertisement


