வேடசந்தூர், ஆக.5: நத்தம் அருகே உள்ள செந்துறை பகுதிகளில் இருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரிக்க சென்றபோது, இருவரும் பைக்கை விட்டுவிட்டு தப்பியோடினர். போலீசார் பைக்கை சோதனையிட்டபோது, சந்தன கட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பிள்ளையார் நத்தம் பகுதியை சேர்ந்த வெள்ளையன்,அடைக்கன்கைது செய்தனர்.
+