தேவதானப்பட்டி, ஆக 5: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் போலீசாருக்கு ஆண்டிபட்டி சாலையில் உள்ள தனியார் காபி கம்பெனி பகுதியில் கிடாமுட்டு போட்டி நடப்பதாக தகவல் கிடைத்தது. ஜெயமங்கலம் எஸ்.ஐ.முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு இரண்டு செம்மறி ஆட்டுக்கிடாக்களை சண்டையிட வைத்து சுற்றி நின்றுகொண்டிருந்தனர். அப்போது ஆண்டிபட்டி கன்னியப்பிள்ளைப்பட்டியைச் சேர்ந்த கோபால்(34) என்பவர் தான் கொண்டு வந்த ஒரு செம்மறி ஆட்டுக்கிடாவுடன் தப்பிச்சென்றுவிட்டார். பின்னர் பெரியகுளத்தைச் சேர்ந்த சல்மான்(24) என்பவர் தான் கொண்டு வந்த செம்மறி ஆட்டுக்கிடாவுடன்,ஆண்டிபட்டியைச் சேர்ந்த தமிழன்(25), திருச்சுனை(25), சிவானந்தம்(20), ஜீவா(23), அசோக்குமார்(19), மேல்மங்கலத்தைச் சேர்ந்த பிரதாப்சிங்(21) ஆகியோரை கைது செய்தனர்.
+