Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தலைப்பு செய்தியாக இருந்தவர் கலைஞர் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் புகழாரம்

காரைக்குடி, ஜூலை 29: காரைக்குடியில் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் 27ம் ஆண்டு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பட்டிமன்றம் நடந்தது. நகராட்சி சேர்மன் முத்துத்துரை வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். புரவலர் பழ.படிக்காசு முன்னிலை வகித்தார். எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், முன்னாள் எம்எல்ஏ சுப.துரைராஜ், நகராட்சி துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கலைஞர் தமிழ்ச்சங்க நிறுவனர் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் துவக்கிவைத்து பேசுகையில், காரைக்குடியில் கலைஞர் தமிழ்ச்சங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவங்கப்பட்டது. கலைஞரின் அறிவுத்திறன், ஆற்றல் திறன், சிந்தனை திறனை, செயல் திறனை உலகம் அறிய செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. 80 ஆண்டுகாலம் தலைப்புச் செய்தியாக இருந்தவர் கலைஞர் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், மணிமுத்து, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் எம்சிவி.குமரேசன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், டாக்டர் ஆனந்த், சின்னத்துரை, மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, சனவெளி ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி.கே.வெங்கடாசலபதி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ராமநாதன், கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணைத்தலைவர் காரைசுரேஷ், மாவட்ட பிரதிநிதி ஜான்கென்னடி, சேவியர், நகர்மன்ற உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் பொறியாளர் தி.செந்தில்குமார் நன்றி கூறினார்.