கிருஷ்ணகிரி, ஆக.22: கிருஷ்ணகிரி பழையபேட்டை ஏ.எம்.கே தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (20). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ஏழுமலை மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால், இதுபற்றி அவரது தாய் லட்சுமி நேற்று முன்தினம் டவுன் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


