திருக்காட்டுப்பள்ளி, அக்.31: திருக்காட்டுப்பள்ளி அருகே பூதலூர் ரயில் நிலையத்தில் ரயில்முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் வசிக்கும் அக்கீம் என்பவரது மனைவி வர்ஜுனா (33).
இவர் நேற்று மாலை பூதலூர் ரயில் நிலைய பகுதிக்கு வந்தார். அப்போது, மாலை 4.30 மணியளவில் மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ஜனசதாப்தி விரைவு ரயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வர்ஜூனா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
  
  
  
   
