திருக்காட்டுப்பள்ளி, அக்.30: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் உப்பிலிகுடியை சேர்ந்தவர் காசி(எ)கார்த்திக் மகன் சேகர்(எ)ஜெயராமன் (55). இவர் பூதலூர் அருகே புதுப்பட்டி சூசை கோழி பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு செங்கிப்பட்டி -பூதலூர் சாலை புதுப்பட்டி சூசை கோழி பண்ணை அருகே உறவினருடன் பேசிவிட்டு கோழி பண்ணைக்குச் செல்ல சாலையை கடந்த போது முத்துவீரகண்டியன் பட்டியை சேர்ந்த ஆல்பர்ட் மகன் கிருபாகாந்த் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி பலத்த காயம் அடைந்தார்.
அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் அன்றிரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி காத்தாயி பூதலூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். புகாரை ஏற்று பூதலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
