தஞ்சாவூர், அக்.30:தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் 9 வார்டுகளில் சிறப்பு வார்டு சபாக் கூட்டம் காணியாளர் தெரு பிள்ளையார் கோவில் வளாகத்தில் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையிலும் செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள் , பூங்கா, பள்ளியில் செயல்படுத்தப்படும் முதலமைச்சர் காலை உணவு திட்டம் மற்றும் சேவை குறைப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பாபநாசம் சுகாதார ஆய்வாளர் பரமசிவம், நாசிக் கரன்சி தொழிற்சாலை பொதுமேலாளரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், பரப்புரையாளர்கள் சுகன்யா, ராதிகா, பேரூராட்சி பணியாளர்கள் சதீஷ், பாலு மற்றும் வார்டு பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
