ஒரத்தநாடு, அக்.30: பட்டுக்கோட்டையை அடுத்துள்ள உதயசூரியபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்துவாட்டாத்திக்கோட்டை போலீசார் அந்தப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உதயசூரியபுரம் கடைத்தெரு அருகே கஞ்சாவுடன் விற்பனைக்காக நின்று கொண்டிருந்த அலிவலம் பகுதியை சேர்ந்த கார்த்திக் வயது (30) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
