தஞ்சாவூர், ஆக.30:புகழ்பெற்ற ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தஞ்சையில் மழலையர் பள்ளியில் குழந்தைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றினைந்து விளையாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் என்ற தலைப்பில் உற்சாக நடன நிகழ்ச்சியை நடத்தினர். அதனை தொடர்ந்து ஒரு கிலோ மீட்டர் தூர வாக்கத்தான் விழிப்புணர்வு நடைபயிற்சி மேற்கொண்டனர்.
இதனை பொது மக்கள், பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். குழந்தைகள், துரித உணவு மற்றும் செல்போன் மோகத்தை குறைத்திட தேசிய விளையாட்டு தினமான நேற்று வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.