திருக்காட்டுப்பள்ளி, செப். 27: திருக்காட்டுப்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் உள்ள தோட்டத்தில் பல்வேறு பழமரர் கன்றுகள் உள்ளது. அதில் சுமார் 10 ஆண்டு வயதுடைய வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தில் பால்வடிவதை தோட்டத்தை பராமரிக்கும் பணியாளர்கள் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வந்து அந்த மரத்தை சுற்றியுள்ள புல் பூண்டுகளை சுத்தம் செய்து மரத்திற்கு தீபமேற்றி வழிபட்டனர்.
மேலும் மரத்தின் அருகில் ஆட்கள் சென்று பேசினால் மரத்திலிருந்து பால் வடிவது அதிகமாக இருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லை என்றால் பால் வடிவது குறைவாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வேப்பமரத்தில் பால் வடிவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.